தமிழகத்தின் இந்த ஒரு பகுதிக்கு மட்டும் 1000 கோடி ரூபாயா? அப்படி என்ன ஆனது அந்த பகுதிக்கு?!  - Seithipunal
Seithipunal



தமிழக பட்ஜெட்டில் வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்ந்தாலும், சமூக பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் சில வட்டாரங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இப்பகுதிகளும் வளர்ச்சி அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்குகளை எட்டுவதற்காக வழங்கு 'வட்டாரங்கள் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகள் உட்பட மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் தலா 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

வடசென்னை : நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட வாழ உகந்த நகரங்களின் பட்டியலில் முன் வரிசையில் உள்ளது.

இருப்பினும் நகரத்தின் சில பகுதிகளில் குறிப்பாக வட சென்னையில் போதிய அளவில் அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது.

சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய 'வட சென்னை வளர்ச்சி திட்டம்' என்ற திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.

இத்திட்டத்தின் கட்டமைப்பு, பற்றாக்குறைகளையும், வளர்ச்சி குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியையும், நடைமுறையில் உள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். 

நெடுஞ்சாலைகள் : மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பெறுக்க சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1407 கோடி ரூபாய் செலவில் 148 கிலோமீட்டர் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கிலோ மீட்டர் சாலைகளை 803 கோடி மதிப்பில் இருவழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Chennai Development FUND Announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->