கொலம்பியாவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரைமட்டமான கோரம்!- நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
horrific tragedy Colombia plane crashed just minutes after takeoff Member Parliament loses his life
கொலம்பியாவின் குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அரசுக்குச் சொந்தமான சதேனா (Satena) நிறுவனத்தின் விமானம் ஒன்று வெனிசுலா எல்லை அருகே விபத்துக்குள்ளாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வான்நோக்கிப் பாய்ந்த சிறிது நேரத்திலேயே தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்ட அந்த விமானம், கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமானது.
இந்தக் கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 13 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் என மொத்தம் 15 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் கொலம்பியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஒருவரும் அடங்குவார் என்ற அதிர்ச்சித் தகவல் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், சிதைந்து கிடந்த விமான பாகங்களுக்கு இடையே மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாட்டின் முக்கியப் பிரதிநிதி உட்பட 15 உயிர்களைப் பறித்த இந்த விபத்து, கொலம்பியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horrific tragedy Colombia plane crashed just minutes after takeoff Member Parliament loses his life