ஆலோசனை தீவிரம்! இடைக்கால பட்ஜெட்டுடன் 4 நாட்கள் மட்டுமே நடக்கிறதா சட்டமன்றக் கூட்டத்தொடர்...?
Intense discussions underway assembly session along interim budget last for only 4 days
தமிழக சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு, கடந்த 20-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களுக்கு, கடந்த 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான பதிலுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அவை தேதி குறிப்பிடப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.தற்போது தி.மு.க. அரசின் ஐந்தாண்டு காலப் பணி நிறைவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் எந்நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தச் சூழலில், தமிழக அரசு ஒரு 'இடைக்கால பட்ஜெட்டை' (Vote on Account) தாக்கல் செய்யத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வரப்போகும் தேர்தலை மையமாக வைத்து, வாக்காளர்களைக் கவரும் வகையிலான அதிரடித் திட்டங்கள் மற்றும் மெகா அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதால், இந்த கூட்டத்தொடர் பெரும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த ‘நிதி அறிக்கை’ வரும் பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை அதில் மாற்றம் இருந்தால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, நான்கு நாட்களுக்குள் அவை நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசுத் தரப்பு காய்களை நகர்த்தி வருகிறது.
இடைக்கால பட்ஜெட்: முழுமையான பட்ஜெட்டுக்கு முன்னதாக, ஒரு குறிப்பிட்ட காலச் செலவுகளுக்காகத் தாக்கல் செய்யப்படுவது.
நிர்வாக முடிவு: பிப்ரவரி மாதத்திற்குள் நிதி ஒதுக்கீடுகளைத் திட்டமிட அரசு முனைப்பு காட்டுகிறது.
English Summary
Intense discussions underway assembly session along interim budget last for only 4 days