எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது..டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை!
No one should participate in any strike Danger trucks are prohibited from protesting
டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டுஉத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
எல்.பி.ஜி. எரிவாயு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, புதிய ஒப்பந்தங்களை வழங்காமல் , தற்போதைய ஒப்பந்தங்கள், 2025 அக்டோபர் வரையும், 2026 பிப்ரவரி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
பெரும் தொகை முதலீடு செய்துள்ள டேங்கர் லாரிகளை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அக்டோபர் 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.அதில் , டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாகவும், இடைப்பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதை டேங்கர் லாரி சங்கங்களும் ஏற்றுக்கொண்டன.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து டேங்கர் லாரி சங்கங்கள் போராட்டத்த்தை வாபஸ் பெற்றன.
English Summary
No one should participate in any strike Danger trucks are prohibited from protesting