ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.! - Seithipunal
Seithipunal


மக்கள் தங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் முறையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகின்றனர். 

இதனால், பொதுமக்கள் கண்மூடித்தனமாக ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவார்கள். 

ஆகவே, பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் இந்த விஷயங்களை எல்லாம் மறந்து விட வேண்டாம். அது என்னவென்று அந்தப் பதிவில் காண்போம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தில் தேவையற்ற வெப்சைட்டுகளும் இடையிடையே விளம்பர லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த விளம்பரத்தில் தவறுதலாக எதையும் கிளிக் செய்துவிட்டால் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது.

மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்த பிறகு கடைசியாக QR code மூலம் பணம் செலுத்துவதற்கு பணம் அனுப்பும் முறை இருக்கும். இதில் கவனமுடன் சரியான ஐடியில் சென்று பணம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இதிலும் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதாவதும் அனைத்து பணத்தையும் ஒரே வங்கிக் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு அதில், நிறைய பணம் இருக்கும். ஷாப்பிங் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு பயன்படுத்தினால் அதிலுள்ள அனைத்து பணமும் திருட வாய்ப்புள்ளது. ஆகவே, ஷாப்பிங் சமயத்தில் தனியாக ஒரு வங்கி கணக்கை பயன்படுத்தினால் நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

no click unwanted websites in online shopping apps


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->