உறவுக்கார பெண்ணுடன் உயிருக்கு உயிரான காதல்.. திடீரென வந்த போன்கால்.. அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சார்ந்தவர் சிவா. இவரது மகன் சந்தோஷ் (வயது 26). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவை சார்ந்த தனது சொந்தகார பெண்மணியொருவரை, கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் அலைபேசியில் பேசி காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி சந்தோஷுக்கு தொடர்பு கொண்ட பெண்மணி தனக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை வரன் பார்த்து நிச்சயம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த சந்தோஷ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன்பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்து எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Youngster Santhosh suicide due to Love Failure


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal