நாங்களும் அழகாகணும் ல... ஒயினை தேடித்தேடி வேட்டையாடி குடித்து போதையில் திரியும் எலிகள்.! - Seithipunal
Seithipunal


மதுபான கடையில் புகுந்து ஒயினை எலிகள் வேட்டையாடி குடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் குறைந்து வந்ததன் எதிரொலியாக படிப்படியாக மதுபான கடைகளும் திறக்கப்பட்டது. முதலில் 27 மாவட்டங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியுடன் திறக்கப்பட்ட மதுபான கடைகள், தற்போது தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.

இதனால் மதுபான பிரியர்கள் தினமும் மது வாங்கி அருந்துகின்றனர். பூரணமாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மதுபான கடைகளை உடைத்து மதுபானங்களை திருடி சென்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வந்தது. 

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருக்கும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. அங்குள்ள காளம்புழா அரசு மதுபான கடையை இன்று திறந்து பார்க்கையில், மதுபாட்டில்களில் மூடியை கடித்து ஒயின் மதுவகைகளை எலிகள் வேட்டையாடி குடித்து இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கூட்டமாக வந்த ஒயினை குடித்த எலிகள், சுமார் ரூபாய் 1,900 மதிப்புள்ள 12 ஒயின் பாட்டில்களை கடித்து குடித்து காலி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிகளுக்கும் அழகு தேவைபட்டதோ என்னவோ? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nilgiris Tasmac Wine Shop Rat Drinks Wine Liquor during Lockdown Time


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->