சென்னையில் கைது செய்யப்பட்ட 5 இஸ்லாமியர்கள்! ஆயுத பயிற்சி செய்தது அம்பலம்! - Seithipunal
Seithipunal


ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியுதவி மற்றும் ஆட்களை அனுப்பியதாக, கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நம் தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். 

இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்த சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில்  ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சென்னையைச் சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 47), மதுரை முகமது யூசுப் (வயது 35), முகமது அப்பாஸ் (வயது 45), திண்டுக்கல் கைசர்(வயது 45), தேனி சாதிக் அலி (வயது 39) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டதும், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட  5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய என்ஐஏ அதிகாரிகளுக்கு 5 நாட்கள் அளித்துள்ளது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்.

விசாரணை முடிந்து வரும் 6-ம்தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வேண்டும் என்றும் என்ஐஏ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NIA Arrested chennai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->