கஞ்சா மணி மாவுகட்டு மணியாக மாறினர்.! காவல்துறை சிறப்பான சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று மீண்டும் ஜாமீனில் வந்தவன் கஞ்சாமணி, இவன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடி மத்திய பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனிடம் என்பவரிடம் சிக்கிக் கொண்டார். அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தி விட்டு தப்பிவந்த மணியை விரட்டிச்சென்ற மத்தியபாதுகாப்பு படை வீரரான தாஸ் என்பவரை முட்டி போட வைத்து கத்தியால் குத்த முயன்று மத்தியபாதுகாப்பு படை வீரருக்கு மரண பயத்தை காட்டிய கஞ்சா மணியின் அட்டகாசம் அந்த வீடீயோவை காண்போரை அதிர வைத்தது.

மத்திய பாதுகாப்பு படை வீரரை முட்டி போடா வைத்து மிரட்டிய கஞ்சா மணி தன்னை ஒரு சர்வதேச ரவுடி போல நினைத்துக் கொண்டான். கையில் வைத்திருந்த சைனா கத்தியை காட்டி தன்னை பிடிக்க வந்த மத்திய பாதுகாப்பு படையினரை நடுங்க வைத்த கஞ்சாமணி மீது தமிழக காவல்துறை நடவடிக்கை பாயுமா? என கேள்வி எழுந்தது

இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கஞ்சா மணியை பிடிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு தனிப்படையினர் கஞ்சாமணியை பிடிக்க களமிறங்கினர். மத்திய பாதுகாப்பு படை வீரரை தாக்கி விட்டு சுற்றி வந்த கஞ்சா மணி தன்னை காவல்துறையினர் பிடிக்க வருவதை அறிந்து சுவர் ஏறிகுதித்து தப்பி ஓடியுள்ளான்.

சுவர் ஏறி ஓடா முயற்ச்சி செய்து எதிர்பாராத விதமாக கஞ்சா மணி வழுக்கி விழுந்ததால் மத்திய பாதுகாப்பு படை வீரரை தாக்க கத்தியை பிடித்த வலது கை, அவரை எட்டி உதைத்த இடது கால் ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு காயம்பட்ட கஞ்சா மணியை மனித நேயத்துடன் மீட்ட போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மணிக்கு மாவுகட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

நெய்வேலியில் கஞ்சா மணி என்று கவுரவமாக சுற்றி திரிந்தவன், தற்போது போலீசாருக்கு பயந்து ஓட்டம் காட்டியதால் மாவுகட்டு மணியாக மாறினான். கஞ்சா மணிக்கு மேலும் சில சிறப்பான சிகிச்சைகள் அளித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

neyveli kanja mani arrested


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->