சமயநல்லூர் அருகே பரிதாபம்.! திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை பலி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் திருமணமான ஒரு மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவருக்கும், திவ்யா என்று இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் ஆனையூரில் இருந்து நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் போலீசார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New groom killed in Twowheeler accident in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->