புதுப்பெண் தற்கொலை: உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியை சேர்த்த  பிரீத்திஎ ன்றபெண்ணு,  , ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணம் முடிந்த து, தம்பதிகள் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர், இந்தநிலையில் தான் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை கொண்டார்.மேலும் விசாரணையில் திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம், இன்னோவா கார் உள்ளிட்டவை கணவர் வீட்டாருக்கு தரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது . மேலும் இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதோடு பிரீத்தியின் உடலை வாங்க குடும்பத்தினர், உறவினர்கள் மறுத்தனர். வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை செய்த கணவர், குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

அவிநாசியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா திருமணம் முடிந்த சில நாட்களில் வரதட்சணை கொடுமை சித்ரவதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New brides suicide Panic as relatives refuse to claim the body


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->