வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு பாதிப்பா?
new air low pressure formed in bay of bengal
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெலுங்கானா வாயிலாக மஹாராஷ்டிரா நோக்கி செல்கிறது. இந்த பகுதிகளில்தான் மழைக்கு வாய்ப்பு அதிகம்.
இருப்பினும் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு சற்று வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும், வருகிற 18-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கும். அதன் பிறகு மீண்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
new air low pressure formed in bay of bengal