பெட்ரோல் வாகன விலையில் EV வாகனங்கள்..அடுத்த 6 மாதங்களில் எலக்ட்ரிக் வாகன விலை குறையும்!நிதின் கட்கரி கொடுத்த சர்ப்ரைஸ்!
EV vehicles at the price of petrol vehicles Electric vehicle prices will come down in the next 6 months Nitin Gadkari surprise
நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.அடுத்த 4 முதல் 6 மாதங்களில், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை, பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாகக் குறையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்:“சமீப மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களைக் குறைத்து, வாகன விற்பனை மற்றும் வாங்குவதற்கான செஸ் வரியை நீக்கியதால், நாட்டில் வாகன விலை ஏற்கனவே குறைந்துள்ளது. இதனால், வரவிருக்கும் மாதங்களில் எலக்ட்ரிக் வாகன விலை, பெட்ரோல் வாகன விலைக்கு இணையாகும்.”
ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய முடிவுகளால்,சிறிய கார்கள் (4 மீட்டருக்கு குறைவானவை – பெட்ரோல் 1,200 சிசி, டீசல் 1,500 சிசி வரை) மீதான வரி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டது.
பெரிய கார்கள் மற்றும் எஸ்யூவிகள் (4 மீட்டருக்கு மேல் மற்றும் 1,500 சிசிக்கு மேல்) மீதான ஜிஎஸ்டி வரி 40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்கரி மேலும் கூறினார்:“நான் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய் இருந்தது. தற்போது அது 22 லட்சம் கோடி ரூபாய் ஆக வளர்ந்துள்ளது.உலகளவில், அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு 78 லட்சம் கோடி ரூபாய், சீனா 47 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்திய ஆட்டோமொபைல் துறையும் அதிவேகமாக முன்னேறி வருகிறது.”
மேலும்,சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் 45,000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் ஈட்டியுள்ளனர்.2027க்குள் நாட்டில் உள்ள அனைத்து திடக்கழிவுகளையும் சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,“கழிவுகளிலிருந்து மதிப்பை உருவாக்குவதே எங்களின் நோக்கம்” என்றும் கட்கரி வலியுறுத்தினார்.
எலக்ட்ரிக் வாகன விலை குறைய உள்ளதால், பசுமையான போக்குவரத்து மற்றும் குறைந்த எரிபொருள் செலவில் பயணிக்க விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு இது பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
English Summary
EV vehicles at the price of petrol vehicles Electric vehicle prices will come down in the next 6 months Nitin Gadkari surprise