நீட் தேர்வில் வெற்ற பெற உதவிய ஆசிரியை.! நெகிழவைக்கும் சம்பவங்கள்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சபரிமாலா என்பவர் திண்டிவனம் அருகே இருக்கும் வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். நீட் தேர்வு காரணமாக டாக்டராக முடியாத விரக்தியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட குழுமூர் அனிதாவின் நிலையைக் கண்டு மிகவும் கொதித்து எழுந்த ஆசிரியை சபரிமாலா தன்னுடைய ஆசிரியப் பணியை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டடார்.

தமிழகம் முழுவதிலும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு தன்னால் இயன்ற வரை உதவி செய்து வருகின்றார். பெண்கள் விடுதலை இயக்கத்தை துவக்கி அவர் நடத்தி வந்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற துயர சம்பவங்களை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அது போலவே வரலாற்று சிறப்புமிக்க பழைமையான நிகழ்வுகளை மற்றும் கல்வெட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி அதை பாதுகாப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், சபரிமாலாவின் மாணவரான ஜீவித் குமார் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார். ஆசிரியை சபரிமாலா இந்த மாணவர் வெற்றி பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நடைபெற்ற போராட்டம் நடைபெற்ற போது மாணவர் ஜீவிதனை சபரிமாலா அடையாளம் கண்டு மருத்துவத்தின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு கொண்டு பல்வேறு இடங்களில் உதவிகளைப் பெற்று அதன் மூலமாக கடந்த ஒரு ஆண்டாக நாமக்கல்லில் இருக்கும் நீட் பயிற்சி மையத்தில் படிக்க அவருக்கு உதவி செய்துள்ளார். 

தற்போது நடந்த நீட்தேர்வில் ஜீவிதன் 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்று இருக்கின்றார். தன்னுடைய கனவை சபரிமாலா நிறைவேற்றி இருப்பதாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜீவிதன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neet exam winning student thanks to his teacher


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->