நீட் தேர்வு ஆள்மாறாட்டம்! ஆதார் ஆணையம் கைவிரிப்பு! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்களை வைத்து, விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாக தேர்ச்சி அடைந்த மாணவர்கள், மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர், இடைத்தரகர் என 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டு சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய 10 மாணவர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டனர்.

இதற்கிடையே, 10 பேரின் விவரங்களை கேட்டு பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பிய நிலையில், நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

neet exam Impersonation case Aadhar Commission say no details


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->