திருப்பூர் || ஒரே நேரத்தில் உயிரிழந்த தாய் சேய்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியை அடுத்த ஆயிக்கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. 

இவர்களுக்கு கடந்த 2020 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் பிரேமா கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரேமாவை பிரசவத்திற்காக திருப்பூர் வீரபாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அனால், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தைக்கு இருதய துடிப்பு குறைவாக இருந்ததால் குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில் குழந்தையின் தாய் பிரேமாவிற்கு அதிக உதிரபோக்கு ஏற்பட்டதனால், பிரேமாவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பிரேமாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரேமாவின் குடும்பத்தினர் போலீசில் புகா அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur mother daughter died


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->