பால் தரத்தை சோதிக்க கொள்முதல் நிலையங்களில் இமேட் கருவி - பொதுமக்கள் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. 

பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இதனால், நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்களும் பாதிக்கின்றனர். 

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:- "அதிக அளவில் பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதல் செய்யப்படும் இடங்களை தேர்வு செய்து அங்கு உணவு பாதுகாப்பு துறையால் இமெட் கருவி பொருத்த வேண்டும். 

அதன் மூலமாக, நுகர்வோர் அனைவரும் பாலின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இதற்கு முன்னதாவே சில இடங்களில் இந்த இமேட் கருவிகள் வைக்கப்பட்டது. ஆனால் அந்த கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால், அங்கு இமெட் கருவி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலில் கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur imet instrument for determining milk quality peoples insistence


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->