பெரம்பலூர் : பேருந்து வசதி இல்லாமல் தேர்வு மையத்திற்கு செல்ல மாணவர்கள் அவதி.!
near perambalur students suffer to bus facility for go to exam center
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப்பள்ளியில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருந்தனர். இந்த மாணவர்களுக்கான தேர்வு மையம் அருகிலுள்ள அன்னமங்கலம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வு மையம் வேப்பந்தட்டையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தேர்வு மையத்திற்கு இன்று பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் குறித்த நேரத்திற்கு தேர்வு மையத்திற்குச் செல்லாமல் சிரமம் அடைந்தனர்.
சில மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் நான்கு பேர் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்தது மட்டுமல்லாமல் சோர்வும் அடைந்தனர்.

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்ர்கள் உள்ளிட்டோர் வேப்பந்தட்டை பள்ளியிலேயே தேர்வு மையம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி முதல்வர் தெரிவித்ததாவது, "பள்ளியில் தேர்வு மையம் அமைப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரியுள்ளோம். அடுத்த முறை முதல் இந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
near perambalur students suffer to bus facility for go to exam center