8 மாதங்களாகியும் குழந்தை இல்லை - மன உளைச்சலில் கணவர் செய்த விபரீதம்.!
near cuddalore man sucide for child lessness
கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆனந்தவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், இதுவரைக்கும் ஆனந்தவள்ளி கர்ப்பம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜனார்த்தனன் தனக்கு குழந்தை இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து கடந்த சில நாட்களாக வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜனார்த்தனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
near cuddalore man sucide for child lessness