கோவை : நல்லபாம்பை பிடித்த வாலிபர் - நொடியில் ஏற்பட்ட விபரீதம்.!
near covai snake attack young man
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் தோட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் அட்டை பெட்டியில் இருந்து வெளியேறிய பாம்பு மாணவர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தது.

இதைப்பார்த்து மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக, தகவலறிந்து வந்த பாலசுப்ரமணியம் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, அந்த பாம்பு எதிர்பாராத விதமாக பாலசுப்ரமணியனை தீண்டியது. ஆனால் அதை பொருட்படுத்தாத அவர் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
near covai snake attack young man