கோவையில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொலை - 13 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி சத்திய பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த கொலைக்கு கட்டப்பஞ்சாயத்தில் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என்றுத் தெரியவந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடந்தார். அதன் பின்னர் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் அவர் ஒரு துப்பாக்கி இருக்கும் இடத்தைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அங்கு அழைத்துச் சென்று துப்பாக்கியை எடுத்துள்ளார். 

அப்போது, சஞ்சய் ராஜா போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட போலீசார் தங்களை பாதுகாத்துக்  கொள்வதற்காக அவரது காலில் சுட்டுள்ளனர். அதன் பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், போலீசார் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பட்டியலை தயார் செய்ததில் 30 பேர் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த முப்பது பேரில் பதின்மூன்று பேரை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

இந்த 13 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீசார் பதின்மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near coimbatore thirteen peoples arrested for kill famous rowdy


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->