குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டது உண்மை.. வெளியான பகீர் தகவல்..!!
NCPCR informed childrens private parts were touched in chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக 4 தீட்சிதர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதி செய்ய சோதனைகள் நடைபெற்றது. இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு புகார் அளித்தனர். அதில் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும், அவர்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகவும் புகாரில் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஊடகத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை. ஆனால் அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக குற்றம் சாட்டிய இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இருவிரல் சோதனை நடைபெறவில்லை என ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகள் மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோன்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் "நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு பரிசோதனை செய்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை. கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தை திருமணம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடத்தி வருகிறார்கள் என்று கூறுபவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
NCPCR informed childrens private parts were touched in chidambaram