5 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்! 5 நாட்கள் வேலை முறையை வலியுறுத்தி செப். 28 முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! - Seithipunal
Seithipunal


வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி (திங்கள்) முதல் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் பழைய தனியார் வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.

இப்போராட்டம் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பாக, செப்டம்பர் 26 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் வாராந்திர விடுமுறை நாட்களாகும். அதைத் தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தொடர்ந்து 5 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ரொக்கப் பரிவர்த்தனை, காசோலை பணமாக்கல் (Cheque Clearance) மற்றும் ஏ.டி.எம் (ATM) சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் வர்த்தகர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டம் குறித்துப் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (AIBEA) பொதுச்செயலாளர் சி. எச். வெங்கடாஜலம், "வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற நியாயமான கோரிக்கையை மத்திய அரசு நீண்டகாலமாக ஏற்க மறுத்து வருகிறது. இது தொடர்பாகத் டெல்லியில் முதன்மைத் தொழிலாளர் நல ஆணையர் நிரஞ்சன் குமார் தலைமையில் 7 வங்கி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 28 முதல் வேலைநிறுத்தம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 1 லட்சம் வங்கி கிளைகளைச் சேர்ந்த 8 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களும் மேலாளர்களும் பங்கேற்க உள்ளதால், நிதித்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெரும் முடக்கத்தைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nationwide Bank Strike From Sept 28 Demanding 5-Day Workweek Services to Be Hit for 5 Consecutive Days


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->