இப்படியும் மரணம் வருமா? மக்களே உஷார்! தந்தை, மகன் பலியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


நத்தம் அருகே இரும்பு கட்டிலின் கால் முறிந்து விழுந்து தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (வயது 35) தையல் தொழில் செய்து வருகிறார். 

இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 30) நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் (வயது 9) மற்றும் யஸ்வந்த் (வயது 6) என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று இரவு வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் கோபி கிருஷ்ணன், மகன் கார்த்திக் இருவரும் டிவி பார்த்தபடியே இரும்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

வெகு நேரமாகியும் இருவரும் கீழே வராததால் மனைவி லோகேஸ்வரி மேலே சென்று பார்த்தபோது, காட்டில் உடைந்து, இருவரும் இறந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து சாணார்பட்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, போலீசாரை விசாரணை மேற்கொண்டதில், கட்டிலின் நான்கு கால்களுக்கும் போல்ட் இல்லாததால் கட்டில் முறிந்து விழுந்து, அதன் இடைவெளியில் இருவரின் கழுத்து சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Naththam dad son death case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->