இதுதானா நல்லாட்சி? காகிதத்தில் உணவு பரிமாறப்பட்ட பள்ளி விவகாரத்தில் அரசியல் புயல்...!
good governance political storm erupts over school incident where food served paper plates
மத்தியப் பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் செயல்படும் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு மதிய உணவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு தட்டுகள் இல்லாததால், நோட்டு மற்றும் புத்தகக் காகிதங்களில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி, கடும் கண்டனத்தை குவித்து வருகிறது.

அதிர்ச்சியளிக்கும் வகையில், மாணவர்களுக்கு தட்டுகள் வாங்குவதற்கான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுத் திட்டப் பிரிவு பொறுப்பாளர் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை முன்வைத்து மோகன் யாதவ் தலைமையிலான ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, “இதுதானா உங்கள் நல்லாட்சி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டும் ஷீயோபுர் பகுதியில் இதேபோல் காகிதங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
English Summary
good governance political storm erupts over school incident where food served paper plates