இதுதான் காங்கிரஸின் எதிர்வினையா? 6,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு காந்தி பெயர்...!
Congress party reaction Naming 6000 village panchayats after Gandhi
மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) தொடர்பான விதிமாற்றங்களுக்கு எதிராக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு முக்கியமான அரசியல் முடிவை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 6,000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட தீர்மானித்துள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

மத்திய அரசு MGNREGA திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விதிகளில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, நேற்று கர்நாடகாவில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணியில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முன்னணியில் கலந்து கொண்டனர்.
அப்போது உரையாற்றிய அவர்கள், காந்தியின் பெயரும் சிந்தனையும் மறைக்கப்படும் எந்த முயற்சியையும் மாநில அரசு ஏற்காது என கடுமையாகத் தெரிவித்தனர்.
இதுவரை மத்திய அரசு 90 சதவீதம் நிதி வழங்கி வந்த நிலையில், புதிய முறையில் மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி காந்தியின் மரபையும் சமூக நீதியின் அடையாளமான இந்தத் திட்டத்தையும் மெதுவாக அழித்து வருவதாக குற்றம்சாட்டிய தலைவர்கள், இதுகுறித்து விரிவான விவாதம் நடத்த சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவித்தனர்.
English Summary
Congress party reaction Naming 6000 village panchayats after Gandhi