அக்கா - தங்கையாக வாக்கப்பட்டு சென்ற பெண்மணிகள்.. கணவனின் கொடூர எண்ணத்தால் கையில் எடுத்த இரும்பு ராடு..! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் நெசவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிகள் மல்லிகா (வயது 43) மற்றும் சரசு (வயது 40). இவர்கள் இருவரும் அக்கா - தங்கையாக இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். 

அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், சரவணன் அவ்வப்போது மதுபோதையில் வந்து இரண்டாவது மனைவி சரசிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனைப்போன்று சம்பவத்தன்றும் தகராறு நடைபெற்ற நிலையில், இரவு வீட்டின் மாடியில் தூங்க சென்றுள்ளார். 

அங்கு வைத்தும் சரவணன் - சரசு இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சரசு கணவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பலியாகவே, இதனை தற்கொலை போல பாவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற ராசிபுரம் காவல் துறையினர், சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனையாகக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், கணவரை கொலை செய்ததை தெரிவித்துள்ளார். மேலும், நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனும் சண்டையிட்டு வந்த ஆத்திரத்தால், இக்கொலை அரங்கேறியது தெரியவந்தது. இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal wife murder husband saravanan, due to fight about affair doubts


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal