கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த பேராசிரியை.. போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவருக்கு 28 வயதில் மீனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அந்த கல்லூரியில் இவர் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், கல்லூரியில் படித்த மாணவன் ஒருவனை மீனா காதலித்துள்ளார். இதில், சம்பந்தப்பட்ட மாணவனாக அறியப்படும் பிரவீன் என்ற 24 வயது நபர் வேல கவுண்டம்பட்டி அருகே இருக்கும் நல்லகுமாரன்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ் என்ற நபரின் மகன். 

இவர்களது காதல் விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததை தொடர்ந்து இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்கள். அத்துடன் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர். 

இதனை தொடர்ந்து, போலீசார் இருதரப்பு வீட்டு பெற்றோர்களையும், அழைத்து, "அவர்கள் மேஜர். எனவே, அவர்களது திருமண விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது." என்று எச்சரித்து அனுப்பி விட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal lecturer love and marry with Student


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->