நம்முடைய அரசு பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை? ஏன் மாணவர் சேர்க்கை குறைகிறது? நாமக்கல் ஆட்சியர் கேள்வி!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனமான செயல்களால் தான், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேதனை தெரிவித்துள்ளார். 

மேலும் நம்முடைய அரசு பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை? அழகான கட்டிடம், சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர். 

ஆனாலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள். அப்படி என்றால் இவ்வளவு அரசு அதிகாரிகள் இருந்து என்னதான் பயன்? என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

 

குடும்ப அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம், திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், தொலைபேசி எண் பதிவு போன்ற சேவைகளுக்காக குறை தீர்க்கும் முகாம் மாதம் தோறும் 2 ஆம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

ஆகஸ்ட் மாத்திற்க்கான குறைதீர் முகாம் நாளை காலை (10 ஆம் தேதி) 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், மோகனூர் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal District Collector say about Govt School


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->