திமுகவில் தஞ்சம் அடைந்த நாமக்கல் மாவட்ட அ.ம.மு.க!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாமக்கல் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் பி.பி.சாமிநாதன் தலைமையில், அமமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர் திரு. எம்.டி.வைரமணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை, நாமக்கல் மேற்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் பி.பி.சாமிநாதன் தலைமையில், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.டி.வைரமணி உள்ளிட்ட நாமக்கல் மாவட்ட அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, பரமத்தி ஒன்றியச் செயலாளர் ஆர்.தர்மராஜ், திருச்செங்கோடு வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.கலாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ஜி.சக்திவேலன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர் பி.தங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.சாதிக்அலி, நாமக்கல் நகர அவைத்தலைவர் ராஜலிங்கம், நாமக்கல் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்.ஏ.அமானுல்லா, பரமத்தி பேரூர்ச் செயலாளர் வி.கே.கோபி,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.சுகுந்தன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் டி.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சி.சோமசுந்தரம், இருக்கூர் ஊராட்சி செயலாளர் சி.ராமசாமி, கே.அய்யம்பாளையம் ஊராட்சி செயலாளர் பி.பெரியசாமி, நல்லூர் ஊராட்சி செயலாளர் கே.எம்.ராஜா, மாவட்ட அமைப்பு சார ஓட்டுநர் தலைவர் வி.வினோத்குமார், மாவட்ட அமைப்புசாரா பொறியாளர் அணி தலைவர் பி.கனகராஜ், மாவட்ட அம்மா பேரவை அணிச் இணைச் செயலாளர் எம்.ஆனந்த், பொத்தனூர் பேரூர் ஐடி விங் செயலாளர் பி.எஸ்.பிரனோஷ், மல்லசமுத்திரம் பேரூர்ச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆனந்த், துணைச் செயலாளர் கோவிந்தராஜ்,  பரமத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், திருமல் ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.மணியன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal AMMK District secretary joined DMK


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal