ஸ்டாலினை சந்திக்க தயக்கம் காட்டும் நளினி! காரணம் இதுதான்! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான நளினி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தூக்கு தண்டனை கிடைத்த போது வாழ்க்கையே வெறுத்து விட்டேன். அதை நினைத்து எந்த நேரமும் அழுது கொண்டே இருப்பேன். இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர கட்டாயம் படிக்க வேண்டும் என சொன்னார்கள். பிறகு நான் படிக்க தொடங்கியதால் மனதளவில் தேறினேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய நளினி தான் ஆறாண்டுகள் கல்வி கற்றதாகவும் எம்.சி.ஏ பட்டத்தில் ஒரு பாடப்பிரிவில் 200க்கு 198 மதிப்பெண் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷியன், பிஸ்னஸ் ஸ்கில்ஸ் போன்ற படிப்புகளையும் தான் படித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "விடுதலை தொடர்பான வழக்கில் ஒவ்வொரு அடியையும் கவனித்துடன் பார்த்து வைத்தோம். விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுக்கும், எங்கள் மீது அன்பு பொழிந்த தமிழக மக்களுக்கும் நன்றி. ஏழு பேர் விடுதலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசையாக உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரதமர் உயிரிழந்தது வருத்தத்திற்கு உரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

"முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பது அவருக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால் அவரை சந்திக்க தயக்கமாக உள்ளது. மேலும் சிறப்பு முகாமில் இருந்து கணவர் முருகனை விடுவித்து தனது மகளுடன் சேர்த்து வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nalini reluctant to meet tamilnadu cm Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->