#கடலூர் | ஒருவாரமாக ஆற்றின் நடுவே சிக்கிய பசு மாடுகள்., உயிரை பணையம் வைத்து உணவளித்த விவசாயிகள்.!
nalanputhur kollidam river cow rescue
கொள்ளிடம் ஆற்றல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஒரு வாரமாக ஆற்றின் நடுவில் இருந்த மணல் தட்டில் சிக்கிக் கொண்ட பசு மாடுகளுக்கு, படகின் மூலம் சென்று விவசாயிகள் உணவு அளித்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியம் பகுதிக்குட்பட்ட நலன் புத்தூர் மற்றும் ஒற்றப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் மாடுகள் மேய்ச்சலுக்காக ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டக்கு சென்றுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் நீர் செல்வதால், 30க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

தற்போது வெள்ளநீர் சிறிது வடிந்துள்ள காரணத்தினால் மோட்டார் படகுமூலம் பில், வைக்கோல் உள்ளிட்டவர்களை எடுத்துச் சென்று, பசியில் கிடந்த பசு மாடுகளுக்கு உணவு அளித்தனர்.
English Summary
nalanputhur kollidam river cow rescue