தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் அதிர்ச்சி தகவல்!
Nagercoil Head Post Office Bomb Threat
கன்னியாகுமரி, நாகர்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று காலை வந்த ஒரு கடிதத்தில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை வெடித்து சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மாவட்ட தபால் துறை அலுவலர் சார்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தபால் நிலையத்துக்கு வந்து சோதனை செய்தனர்.
மேலும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தபால் நிலையத்தில் இருந்த பார்சல்கள் அனைத்தும் பரிசோதனை செய்து பார்த்தனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதியது யார் எங்கிருந்து அனுப்பப்பட்டது என விசாரணை நடத்தினர்.
அப்போது வடிவீஸ்வரம் தபால் நிலையத்திலிருந்து அஞ்சல் முத்திரை பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வடிவீஸ்வரன் தபால் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த சி.சி.டிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரை போலீசார் பிரித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் தான் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் போலீசார் எதற்காக இது போன்ற கடிதத்தை அனுப்பினாய் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக்குமார், கடந்த சில ஆண்டுகளாக தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி தெரிவித்துள்ளார். ஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்து அசோக்குமார் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Nagercoil Head Post Office Bomb Threat