வீடு புகுந்து 5 பேரை வெட்டிய திமுக கவுன்சிலர் புருஷன்&ஆதரவாளர்கள்?!
Nagai Pattinacherry DMK Counselor Husband Attack
நாகை மாவட்ட மீனவர் கிராமத்தில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
திமுக கவுன்சிலர் கணவர் நாகரத்தினம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும், கிராமத்தின் நிதி சம்பந்தமாக ஜெகநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதனால் திமுக கவுன்சிலரின் கணவர் நாகரத்தினம் தரப்புக்கும், புகார் அளித்த தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இன்று பகல் திமுக கவுன்சிலர் கணவர் நாகரத்தினம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், புகார் அளித்த ஜெகநாதனின் வீடு புகுந்து கட்டை மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜெகநாதன், கலைவாணி, ராம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அறிவால் வெட்டு விழுந்துள்ளது.

திமுக கவுன்சிலர் கணவர் நாகரத்தினம் உள்ளிட்ட குண்டார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
English Summary
Nagai Pattinacherry DMK Counselor Husband Attack