கழிவுநீர் தொட்டியில் மர்மம்...! மனித எலும்புகள் கண்ட போலீசார் அதிர்ச்சி...!
Mystery sewage tank Police shocked find human bones
கோயம்பேடு மார்க்கெட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சென்னை கோயம்பேடு சந்தையின் 18-வது கேட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி சில நாட்களாக அடைபட்டு, துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை அந்த தொட்டியை திறந்து, நவீன எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர்.அப்போது தொட்டியின் அடிப்பகுதியில், கருமையாக மாறிய ஒரு பொருள் மிதந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, அது மனித மண்டை ஓடு மற்றும் அருகில் நீளமான 2 எலும்புகள் இருப்பது தெரியவந்தது.

இதைக் கண்டு அங்கு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியில் பின்னடைந்தனர்.உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி புலனாய்வு துறையினர் மூலம் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.யாராவது குடிபோதையில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்தார்களா?அல்லது, கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடலை இங்கு வீசி மறைத்தார்களா?அதனால் உடல் அழுகி எலும்புக்கூடானதா?எனக் கேள்விகள் எழுந்துள்ளன.மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நீதிமருத்துவ ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்த பிறகே, மர்மத்தின் பின்னணி வெளிச்சம் காணும் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Mystery sewage tank Police shocked find human bones