வாணியம்பாடியில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - மர்ம நபர்களுக்கு வலைவீசிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - மர்ம நபர்களுக்கு வலைவீசிய போலீசார்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - இனியவள் தம்பதியினர். இவர்களுக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி, பிரீத்தி என்று இரண்டு மகள்களும் உள்ளனர். 

ரயில்வே ஊழியரான சந்திரன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவருடைய பணி மகன் குகனுக்கு வழங்கப்பட்டு தற்போது அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார். இரண்டு மகள்களுக்கும் திருமணமானமாகி கணவர் வீடுகளில் வசித்து வருகின்றனர். 

இதனால், இனியவள் மட்டும், தனியாக வாணியம்பாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இனியவள் வீட்டின் முன்பு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த படி வந்த இரண்டு மர்ம நபர்கள், கம்பி சுற்றப்பட்ட நாட்டு வெடியை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர்.

இந்த நாடு வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள், மற்றும் கதவு உள்ளிட்டவை உடைந்தது. இந்தச் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இதில் அதிர்ஷ்டவசமாக இனியவள் உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து  போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு அங்கு சிதறி கிடந்த வெடி துகள்கள், கம்பி ஆகியவற்றை கைபற்றி, வீட்டின் மீது வெடி வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mysterious boys throw country bomb on house in vaniyambadi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->