நகராட்சி ஊழியர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய மர்மநபர்கள் - தீவிர விசாரணையில் போலீசார்.!
mysterious boys robbery in Municipal employee house in ulunthur pettai
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். மர்ம நபர்கள் சிலர் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து
11 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையறிந்த சதீஷ்குமார் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ்குமாரின் வீட்டில் சோதனை செய்தனர்.
பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mysterious boys robbery in Municipal employee house in ulunthur pettai