மது குடிக்காதே என கூறிய மனைவி கொலை., தமிழகத்தில் மதுவால் தொடரும் அவலம்...!! - Seithipunal
Seithipunal


மது அருந்த கூடாது என கூறிய மனைவியை வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், எடமலைபட்டியில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவி உள்ளார். கோபாலுக்கு மது பழக்கம் இருந்துள்ளது.

இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபழக்கத்தை கைவிட பலமுறை அனிதா கோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால், கோபால் அதனை கேட்கவில்லை மாறாக நாளுக்கு நாள் மதுபழக்கத்திற்கு அடிமையாகும் அளவிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று வழக்கம் போல கோபால் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அனிதா அவரிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த  அவர் வீட்டில் இருந்த சிலிண்டரால் அனிதாவை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர்  ரத்தவெள்ளத்தில் கிடந்த அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் கோபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது அருந்தாதே என கூறிய மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder of wife who said she did not drink alcohol


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->