திருமதி.R.S.சுபலட்சுமி அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர், தென்னகத்தின் முதல் பெண் பட்டதாரி திருமதி.R.S.சுபலட்சுமி அவர்கள் பிறந்ததினம்!.

 பெண் இயக்கத்திற்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சகோதரி சுபலட்சுமி (R. S. Subbalakshmi, ஆகஸ்ட் 18, 1886 - டிசம்பர் 20, 1969) சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 

 சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சுப்பிரமணிய அய்யர். அரசுப் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். தாயார் விசாலாட்சி. இவர்களது முதல் குழந்தையாகப் பிறந்தவர் சுபலட்சுமி. இவரது குடும்பம் தஞ்சை வைகளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த பிராமணக் குடும்பமாகும்.

சைதாப்பேட்டையில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்றார் 1898 இல் சுபலட்சுமியின் 11 ஆவது வயதில் இவர்களது குலமுறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆனால் உடனே தனது கணவனை இழந்தார். கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் எழும்பூரிலிருந்த பிரசிடென்சி மேல்நிலை மற்றும் பயிற்சிப்பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 

1905 மெட்ரிகுலேசன் தேர்வில் எல்லாப்பாடங்களிலும் ( முதலாவதாத் தேறினார். கல்வி மட்டுமின்றி வீணை மீட்டுவதிலும் பயிற்சியெடுத்துக் கொண்டார். 1898 இல் பின்னர் ஜார்ஜ் டவுனிலிருந்த பிரசன்டேசன் கான்வென்டில் எப். ஏ வகுப்பில் சேர்ந்தார். 1908 இல் பி. ஏ வகுப்பில் சேர்ந்து 1911 ஆம் வருடம் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்வு பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mrs R S Subalakshmis birthday


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->