திமுக அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
DMK Minister Periyasamy Case High Court Supreme Court order
2006 முதல் 2010 வரை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.
ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் முன்னெடுத்து 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்காலமாக தடை செய்தது.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்துள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary
DMK Minister Periyasamy Case High Court Supreme Court order