திமுகவிற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிச்சாமி... பரபரப்பு பேட்டி!
ADMK Edappadi palanisami call DMK Alliance MKStalin
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி இராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அணைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை கட்சி பேதம் இன்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Edappadi palanisami call DMK Alliance MKStalin