இந்திய தேர்தல் ஆலோசனை குழுவில் MP தங்கதமிழ்செல்வன்!
MP Thangamach Selvan in the Indian Election Advisory Committee
இந்திய தேர்தல் ஆலோசனை குழுவில் MP தங்கதமிழ்செல்வன் பங்கேற்றதால் தேனிக்கு பெருமை என பொதுமக்கள் புகழாகரம் சூட்டியுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.தங்கதமிழ்செல்வன்அவர்கள், திரு.என்.ஆர்.இளங்கோ அவர்கள், திரு.டி.எம்.செல்வகணபதி அவர்கள், திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள், திரு.ச.முரசொலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் நடைமுறை தொடர்பான விதிமுறைகள் அனைத்து மாநில மொழிகளிலும் வழங்குதல், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த மேற்கொள்ள ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை ஆவணமாகப் பெறுதல், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களோடு ஒன்றிணைந்து செயல்படுதல், இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்திய தேர்தல் ஆலோசனை குழுவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் அவர்களை தேர்வு செய்யப்பட்டதால் தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துவிட்டதாக தேனி மாவட்ட மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
MP Thangamach Selvan in the Indian Election Advisory Committee