தேர்தல் நேரத்தில் தான் தமிழர்கள் மீது பாசம் வருகிறதா? - எம்.பி கனிமொழி தாக்கு.!!
mp kanimozhi speech about central government
கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்ததனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் மாநிலங்களவை ஆரம்பமானது. அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அதாவது:
புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரைக்கும் பதில் இல்லை. மும்பை தாக்குதல் நிகழ்ந்தபோது பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டார். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்.

விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதலின்போது என்ன செய்தார். பஹல்காம் தாக்குதலுக்கு மோடி பொறுப்பேற்றாரா? RAW மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? மக்களை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து விட்டது.
அரசாங்கம் உங்களிடம் தான் உள்ளது. மக்களை காக்க தவறி விட்டீர்கள். கேள்வி எழுப்பினாலே தேச விரோதி என முத்திரை குத்துவதா? அரசியல் என்ற பெயரில் நாட்டை ஏன் பிளவுபடுத்த நினைக்கிறீர்கள். தேர்தலின்போது தமிழர் பெருமை பேசும் பா.ஜ.க. அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறது.
தேர்தல் நேரத்தில் மட்டும் சோழர்கள், தமிழர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.
விக்ரம் மிஸ்ரி என்ற அதிகாரியை அவதூறு செய்தபோது என்ன செய்தீர்கள். கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் என டிரம்ப் 25 முறை கூறுகிறார்.
இதுதான் பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கையா? வெளியுறவுக் கொள்கையில் மத்திய பா.ஜ.க. அரசு சாதித்தது என்ன? வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. ஆணையத்தின் உதவி, சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக இல்லாமல் ஜனநாயகத்தின் மூலம் தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mp kanimozhi speech about central government