பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்க்கு வலைவீச்சு..!
Mother left her baby in Hospital
பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பி ஓடிய தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி ஐஸ்வர்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்ததால் குழந்தைகள் பாதுகாப்பு வார்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

கடந்த 22-ஆம் தேதி முதல் ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் காணவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது.
இதனால் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார் என்பதும் தெரியவந்தது, இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர்.
English Summary
Mother left her baby in Hospital