அதிரடி சோதனை... சிக்கிய மாமியார்-மருமகன்..! வீட்டில் பதுக்கிய 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்து விற்பனை செய்த மாமியார்-மருமகனை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரம் பகுதியில் வீட்டில் மறைத்து வைத்து கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேண்டா(45) என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் 60 லிட்டர் கள்ளசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட வேண்டா மற்றும் அவரது மருமகன் குருமூர்த்தி (22) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 45 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother in law son in law arrested for hiding and selling counterfeit liquor in tiruvallur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->