தூங்கிக் கொண்டிருந்த மருமகள்.. முகத்தில் ஆசிட்.. வாயில் கொசு மருந்து.. மாமியார் செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த மருமகள் மீது மாமியார் ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் ராஜ். இவருடைய மனைவி கிருத்திகா (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த மாமியார் ஆண்டாள் (55), கிருத்திகாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து இன்று அதிகாலை, கிருத்திகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மாமியார் ஆண்டாள் வீட்டில் இருந்த ஆசீட்டை எடுத்து கிருத்திகாவின் கண், காது, முகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மீது ஊற்றியுள்ளார். மேலும் கிருத்திகாவின் வாயில் கொசு மருந்தை ஊற்றி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருத்திகா கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆசிட் ஊற்றியதில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விருதாச்சலம் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மருமகள் மீது ஆசிட் ஊற்றிய மாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother in aw poured acid on sleeping daughter in law in Cuddalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->