கொரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.! - Seithipunal
Seithipunal


கொரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், 11-ம் வகுப்பைச் சேர்ந்த 417 பேர், 12-ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவிகளுக்கும், 9-ஆம் வகுப்பை சேர்ந்த 37 மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பை சேர்ந்த 45 மாணவிகளுக்கும், 8-ம் வகுப்பை சேர்ந்த 10 மாணவிகள் என மொத்தம் 511 மாணவிகளுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கொரோனா காலத்தில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

மேலும் திருமணமான மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than five hundred students were married during the Corona period


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->