பருவ மழை முன்னெச்சரிக்கை..மழைநீர்  உறிஞ்சும் இயந்திரம் அமைத்து கொடுத்த MLA!  - Seithipunal
Seithipunal


நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக  பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட  பிரிவின் மூலம் ரூபாய் 37 லட்சம் செலவில் முதல் கட்டமாக குபேர் நகர் பகுதியில் மழைநீர்  உறிஞ்சும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாரு மழைநீர் வடிகால் வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளான  குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோனியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதி, நேரு நகர், சகாயமாதா பாடசாலை வீதி,பாரதிதாசன் வீதி, பூங்குளம், கென்னடி நகர், சாரதி நகர், சாந்தி நகர், இளங்கோ நகர்   மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் மழை அதிக அளவில் பெய்யும் போது உப்பனாரு  வாய்க்காலில் மழை நீர் கரைபுரண்டு ஓடுவதால் மேற்கண்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் அதிக சூழ்ந்து கொள்கிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து தங்களின் உடமைகளையும் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது...

 இதனை அறிந்த உருளையன்பேட்டை  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக  பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட  பிரிவின் மூலம் ரூபாய் 37 லட்சம் செலவில்.....
முதல் கட்டமாக குபேர் நகர் பகுதியில் மழைநீர்  உறிஞ்சும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது... 

இதனை இயக்கும் நிகழ்ச்சி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான  திரு.G.நேரு(எ)குப்புசாமி  MLA அவர்கள் திருகரங்களால்   இயக்கப்பட்டது... இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு செயற்பொறியாளர்
 திரு. ராதாகிருஷ்ணன்உதவி பொறியாளர் திரு.மதிவாணன் இளநிலை பொறியாளர் திரு.ஷாம் மற்றும்  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பகுதி முக்கிய பெரியவர்கள் மற்றும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும், மகளிர்களும், இளைஞர்களும் பலர் கலந்து கொண்டனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monsoon alert MLA has provided a machine for rainwater harvesting


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->