அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை இழந்த அப்பாவி மக்கள்.! திருப்பத்தூரில் பரபரப்பு.!!
money fraud to peoples on online app in tirupathur
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை இழந்த அப்பாவி மக்கள்.! திருப்பத்தூரில் பரபரப்பு.!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே "கிராஸ் வேர்ல்ட்" என்ற இணைய செயலி மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற விளம்பரம் வேகமாக பரவியது.

அந்த விளம்பரத்தில் கிராஸ் வேர்ல்ட் செயலியில் 600 ரூபாய் முதலீடு செய்தால் முதல் நாள் 24 ரூபாய் வட்டியும், அடுத்த 10 நாட்களுக்கு 240 ரூபாயும், 30 நாட்களுக்கு 740 ரூபாயும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக 36 லட்சம் வரை முதலீடு செய்தால் மாதம் 2.5 லட்சம் கிடைக்கும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய மக்கள் சுமார் 5,000 மேற்பட்டோர் அந்த செயலியில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் செயலி கடந்த சில தினங்களாக சரிவர இயங்காததால் தாங்கள் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்தபுகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் செயலியில் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசையில் 5000 க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
money fraud to peoples on online app in tirupathur