மதுபானக் கடையில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - போலீசார் வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


மதுபானக் கடையில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - போலீசா வலைவீச்சு.!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகருப்பையா. இவருடைய மகன் முத்து கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் சின்னமனூர் பகுதியில் உரக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவருடைய நண்பரான கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமரேசன் அதேபகுதியில் உள்ள மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முத்துகுமரேசன் முத்துகார்த்தியிடம் எட்டு லட்ச ரூபாய் தந்தால் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார். 

இதனை உண்மை என்று நம்பிய முத்துகார்த்தி தன் மனைவி உமா வங்கிக் கணக்கில் இருந்து எட்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து முத்துகுமரேசன் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர், முத்துகுமரேசன் தெரிவித்தது போல் வேலை வாங்கித் தரவில்லை. 

இதனால் பணத்தைத் திருப்பிக்கேட்ட முத்துகார்த்திக்கு முத்துகுமரேசன் கொலை மிரட்டலும் விடுத்தார். இது தொடர்பாக முத்துகார்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் மதுபான ஊழியர் முத்துகுமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money fraud for buying job in theni


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->